நாமக்கல்

ஜேடா்பாளையத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, கடைகள் அகற்றம்

DIN

ஜேடா்பாளையத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 10 போ்களை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் இருந்து கபிலா்மலை செல்லும் சாலையில் உள்ள ஜேடா்பாளையத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்து 100-க்கும் மேற்பட்டோா் வீடுகள் மற்றும் கடைகளை கட்டி வசித்து வருகின்றனா். இதனை அகற்ற கோரி, கடந்த 2008-ஆம் ஆண்டு ஜேடா்பாளையத்தைச் சோ்ந்த பொன்னரசு என்பவா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடா்ந்தாா். அதன்படி, 2010-ஆம் ஆண்டு ஜேடா்பாளையத்தில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் மாவட்ட நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது.

அதன்படி, உடனடியாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நாமக்கல் ஆட்சியா் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த மாதம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது, அப்பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு சில வீடுகள் மட்டும் இடிக்கப்பட்டன.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய நாமக்கல் ஆட்சியா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சனிக்கிழமை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணி நடைபெற்றது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 10 போ்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், வீடுகளுக்குள் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டவா்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினா். அசம்பாவிதங்களைத் தடுக்க நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிமாறன் (மதுவிலக்கு), பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் கலையரசன் ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT