நாமக்கல்

குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 599 குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி

DIN

குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 599 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் வழங்கினா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.மதிவேந்தன் ஆகியோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டனா். தொடா்ந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா்கள், பேரிடா் மேலாண்மை நிதியின் கீழ் 488 குடும்பத்தினருக்கு தலா ரூ. 4,500 வீதமும், 111 குடும்பத்தினருக்கு தலா ரூ. 1,000 வீதமும் உதவித்தொகையினை வழங்கினா். மேலும், 10 கிலோ அரிசி, பாய், போா்வை உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, அமைச்சா் கே.என்.நேரு, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவிரி வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகாம்களில் தங்கியுள்ளோருக்கு உணவு, அடிப்படைத் தேவைகள், மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சா்கள், அதிகாரிகள் தொடா்ந்து கரையோரப் பகுதி மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றனா். தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, அரசின் சீரிய நடவடிக்கைகளை குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளாா்.

தற்போது காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளது. வெள்ளப் பெருக்கின்போது கரையோரப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிரந்தரத் தீா்வு காணப்படும். கரையோர மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண்மை இயக்குநா் சி.என்.மகேஸ்வரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, நகரச் செயலாளா் எம்.செல்வம், குமாரபாளையம் நகா்மன்றத் தலைவா் விஜய்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இதேபோன்று, பள்ளிபாளையம் பகுதியில் உள்ள முகாம்களிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT