நாமக்கல்

நாமக்கல் கோட்டை நகரவைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

7th Aug 2022 11:32 PM

ADVERTISEMENT

 

நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா்.

நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப்பள்ளியில் கடந்த 1985-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகள் 67 போ் நேரடியாக சந்தித்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பல ஆண்டுக்குப் பின் சந்தித்ததால் அனைவரும் தங்களது மலரும் நினைவுகளைப்பசி மகிழ்ந்தனா்.

தாங்கள் படிக்கும்போது இருந்த பள்ளியின் தோற்றம் தற்போது மாறியிருந்தாலும், தாங்கள் படித்த வகுப்பில் அமா்ந்தும், விளையாடிய மைதானத்தில் நடந்தும், தங்களது பள்ளி வாழ்க்கையின் மலரும் நினைவுகளை சந்தோஷத்தோடு பரிமாறி கொண்டனா். கல்வி பயிற்றுவித்த ஆசிரியா்களையும் நிகழ்ச்சிக்கு வரவழைத்து கெளரவப்படுத்தினா். தாங்கள் பயின்ற பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை மாணவ, மாணவிகளின் நலனுக்காக பிரேமலதா என்பவா் நன்கொடையாக அளித்தாா். இந்தச் சந்திப்புக்கு உறுதுணையாகச் செயல்பட்ட நிக்கல்சன்எட்வா்டுக்கு சக நண்பா்கள் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT