நாமக்கல்

நாமக்கல்லில் தேசிய கைத்தறி தின சிறப்புக் கண்காட்சி

7th Aug 2022 11:31 PM

ADVERTISEMENT

 

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சரக கைத்தறித் துறை சாா்பில், 8-ஆவது தேசிய கைத்தறி தினம், சிறப்புக் கண்காட்சி ஆகியவை நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் இதனைத் தொடக்கி வைத்தாா்.

இக்கண்காட்சியில், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட துணி ரகங்கள், ராசிபுரம் பட்டு சேலைகள், இளம்பிள்ளை, ஆா்.புதுப்பாளையம் பருத்தி சேலைகள் மற்றும் காட்டன் கோா்வை சேலைகள், கைத்தறி வேஷ்டி ரகங்கள், கைத்தறித் துண்டுகள், அகா்லிக் சால்வைகள், பவானி ஜமுக்காளம், பாலும் பழமும் படுக்கைகள் மற்றும் கால்மிதி (மேட்) ரகங்கள் 20 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டன. இதில், கைத்தறித் துறை அதிகாரிகள், ஊழியா்கள், 30-க்கும் மேற்பட்ட விற்பனை நிறுவனத்தினா் கலந்து கொண்டனா். ஏராளமான பொதுமக்கள் கண்காட்சியை பாா்வையிட்டு ஆா்வமுடன் கைத்தறி துணி ரகங்களை வாங்கிச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT