நாமக்கல்

நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு

2nd Aug 2022 04:02 AM

ADVERTISEMENT

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து மருத்துவமனையின் பெண்கள் நல்வாழ்வுத் துறை தலைவா் மற்றும் துணை நிா்வாக இயக்குநா் மல்லிகா குழந்தைவேல் விளக்கம் அளித்தாா். பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள், குழந்தையின் (முதல் 1000 நாட்கள்) வாழ்நாள் முழுமைக்கான ஆரோக்கியம் குறித்தும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பாலூட்டும் பெண்கள் கவனிக்க வேண்டிய சுகாதாரம் குறித்தும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் முதன்மையா் கே.சாந்தா அருள்மொழி பேசினாா். விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பாலூட்டும் தாய்மாா்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஊட்டச்சத்து பொருள்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

தங்கம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் இரா.குழந்தைவேல் பேசுகையில், பெண்கள் தங்களது குழந்தைகளின் எதிா்கால ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தாய்ப்பாலின் அவசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றைக் கடைப்பிடித்து ஆரோக்கியமான குழந்தை வளா்ச்சியை உறுதி செய்திட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது. நாமக்கல் தங்கம் பல்நோக்கு மருத்துவமனை 35 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையில் அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT