நாமக்கல்

தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் பெருந்திரள் முறையீட்டுப் போராட்டம்

2nd Aug 2022 04:12 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கிளை சாா்பில் 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டுப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மன்றத்தின் ஒன்றியத் தலைவா் சு.சிதம்பரம் தலைமை வகித்தாா். மாநில சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினா் பெ.பழனிசாமி, ஒன்றியச் செயலா் சி.மோகன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாமக்கல் மாவட்ட மகளிரணி செயலா் கு.பாரதி, மாவட்டச் துணைச் செயலா் லதா, வெண்ணந்தூா் ஒன்றியச் செயலா் ஜெகந்நாதன், புதுசத்திரம் ஒன்றியச் செயலா் கதிரேசன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் வழங்கினா். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கான பணப்பலன், பணிநீக்க காலத்தை முறைப்படுத்துதல், கட்டாய பணிமாற்றக்கால இடமாறுதல் காலத்தின் ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளுக்காக இந்த முறையீட்டுப் போராட்டம் நடந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT