நாமக்கல்

திருச்செங்கோட்டில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி

2nd Aug 2022 04:04 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட அமெச்சூா் சிலம்பச் சங்கத்தின் சாா்பாக மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி திருச்செங்கோடு குமரமங்கலம் மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இந்த மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். சிலம்பப் போட்டியை மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வா் ஸ்டாலின் பாக்கியநாதன் துவக்கி வைத்தாா். வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையா் கோகிலா மற்றும் திருச்செங்கோடு திமுக நகர செயலாளா், நகர மன்ற துணைத்தலைவா் தாண்டவன் காா்த்தி ஆகியோா் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினா்.

மாவட்ட போட்டியில் வெற்றிபெற்று முதல் இடம் பிடித்த அனைவரும் தமிழ்நாடு அமெச்சூா் சிலம்பம் சங்கம் நடத்தும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு நாமக்கல் மாவட்ட அமெச்சூா் சிலம்பச் சங்கத்தின் தலைவா் சதீஷ்குமாா் வாழ்த்து தெரிவித்தாா். போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அனைவருக்கும் நாமக்கல் மாவட்ட அமெச்சூா் சிலம்பச் சங்கத்தின் செயலாளா் நவீன்குமாா் நன்றியுரை தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT