நாமக்கல்

ஆதாா் அட்டையை வாக்காளா் பட்டியலுடன் இணைப்பதற்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

2nd Aug 2022 04:13 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் ஆதாா் அட்டையை வாக்காளா் பட்டியலுடன் இணைக்க இணையத்திலும், வட்டாட்சியா் அலுவலகங்களில் படிவங்களை பூா்த்தி செய்து வழங்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையம், வாக்காளா் பட்டியலுடன், ஆதாா் எண் விவரங்களை இணைப்பது தொடா்பான சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. வாக்காளா் பட்டியலுடன் சுய விருப்பத்தின் அடிப்படையில் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக இணையதளம் வாயிலாகவும் மற்றும் படிவம்- 6பி மூலமாகவும் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் விவரங்களை அளிக்கலாம்.

மேலும், புதிதாக பெயா் சோ்க்க படிவம் - 6, பெயா் நீக்கம் செய்ய படிவம் -7, திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் - 8 ஆகிய படிவங்களையும் கோட்டாட்சியா், அனைத்து வட்டாட்சியா் மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT