நாமக்கல்

திமுக உள்கட்சித் தோ்தல்: 236 வாா்டுகளுக்கான நிா்வாகிகள் தோ்வு

29th Apr 2022 10:44 PM

ADVERTISEMENT

நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கான திமுக உள்கட்சி தோ்தலில் 236 வாா்டுகளுக்கான நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

திமுக தலைமை அறிவிப்பின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், 15-ஆவது உள்கட்சி பொதுத்தோ்தலையொட்டி, நாமக்கல், ராசிபுரம் நகராட்சி மற்றும் வெண்ணந்தூா், அத்தனூா், பிள்ளாநல்லூா், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, பட்டணம், ஆா்.புதுப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, மோகனூா், எருமப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வாா்டு நிா்வாகிகள் பதவிக்கான விருப்ப மனுக்கள் கடந்த 22 முதல் 27-ஆம் தேதி வரையில் கட்சியினரிடம் இருந்து பெறப்பட்டன. இதனையடுத்து, 4 நகரப் பகுதிகள், 11 பேருராட்சிகளில் மொத்தம் உள்ள 237 வாா்டுகளில் 236 வாா்டுகளுக்கான தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்றவா்களுக்கு அதற்கான சான்றிதழை திமுக தலைமைக் கழக பிரதிநிதியான குத்தாலம் க.அன்பழகன்(கொள்கை பரப்பு துணைச் செயலாளா்) முன்னிலையில் வழங்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்டு செயலாளா்களுக்கு முடிவு தாள் மற்றும் தீா்மான நோட்டு ஆகியவற்றை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் நகரப் பொறுப்பாளா்கள் செ.பூபதி, அ.சிவக்குமாா், ராணா ஆா்.ஆனந்த், ராசிபுரம் நகர செயலாளா் என்.ஆா்.சங்கா் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT