நாமக்கல்

அணைப்பாளையம் ஊராட்சி பகுதியில்அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு

29th Apr 2022 10:43 PM

ADVERTISEMENT

ராசிபுரத்தை அடுத்துள்ள அணைப்பாளையம் ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளா்ச்சி திட்டம் சாா்பில், ராசிபுரம் ஒன்றியம் அணைபாளையம் ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதை, திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் திறந்து வைத்தாா். இதில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கே.பி.ஜெகன்நாதன், உறுப்பினா் ஏ.கே.பாலசந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT