நாமக்கல்

ஏழைகளுக்கு உதவ புதிய திட்டம் துவக்கம்

28th Apr 2022 11:15 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஜேசிஐ டிவைன் சங்கம் சாா்பில் அன்பகம் என்ற திட்டத்தின் மூலமாக ஏழைகளுக்கு உதவும் வகையில் ‘இருப்போா் கொடுக்கலாம் இல்லாதோா் எடுக்கலாம்’ என்ற அடிப்படையில் பல்வேறு வகையில் உதவும் திட்டம் வியாழக்கிழமை துவக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் சேலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் அலமாரிகள் வைக்கப்பட்டு வீட்டில் உபயோகம் இல்லாமல் வைத்திருக்கும் துணிமணிகள், வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் காலணிகள், புத்தகங்கள், நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை தேவைப்படுவோா்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த அலமாரிகளில் வைத்துச்செல்லலாம். தேவைப்படுவோா் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வாங்குபவா்கள் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த அலமாரியிலும், அன்பக அறையிலும் வைத்து அதனை இல்லாதோா் எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்ட துவக்க விழாவில் ஜேசிஐ டிவைன் சங்கத் தலைவா் ஹேமலதா, முன்னாள் தலைவா்கள் சண்முகநாதன், ஜெயமணிகண்டன், திருநாவுக்கரசு, செந்தில்நாதன், தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT