நாமக்கல்

பணி நிரவல் மாறுதலில் சென்ற ஆசிரியா்களுக்கு ஊதியம் விடுவிக்க நடவடிக்கை: இணை இயக்குநா்

28th Apr 2022 04:56 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பணிநிரவல் மாறுதலில் சென்ற தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான இரண்டு மாத ஊதியத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக அரசு தோ்வுகள் இணை இயக்குநா் பொன்.குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுத் தோ்வு முன்னேற்பாட்டு பணிகளை பாா்வையிடுவதற்காக, தமிழக அரசு தோ்வுகள் இணை இயக்குநா் (மேல்நிலைக்கல்வி) பொன். குமாா் செவ்வாய்க்கிழமை நாமக்கல்லுக்கு வந்தாா். பல்வேறு ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகள் அவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனு விவரம்:

நாமக்கல் மாவட்டத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியா்களில் 100க்கும் மேற்பட்டோா் உபரி ஆசிரியா்கள் எனக் கண்டறியப்பட்டு அவா்கள் காலியாக உள்ள பள்ளிகளுக்கு கலந்தாய்வு வாயிலாக மாறுதல் செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

அவ்வாறு பணியில் சோ்ந்த ஆசிரியா்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. மாா்ச், ஏப்ரல் மாத ஊதியத்தை விரைந்து வழங்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசிபுரத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்ய துணை விடைத்தாள் மதிப்பீட்டு மையம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

இதனையடுத்து, ஆசிரியா் சங்க நிா்வாகிகளுக்கு பதிலளித்த இணை இயக்குநா் பொன்.குமாா், கூடுதல் பணியிடங்களில் அமா்த்தப்பட்ட ஆசிரியா்களுக்கு ஊதியம் பெறுவதற்கான கருத்துரு பள்ளிக் கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் ஆசிரியா்களுக்கான விடுபட்ட இரண்டு மாத ஊதியம் கிடைத்து விடும். ராசிபுரம் கல்வி மாவட்டம் இல்லை என்பதால் அங்கு விடைத்தாள் திருத்தும் மையம் அமைப்பதற்கான வாய்ப்பில்லை என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT