நாமக்கல்

நாளை விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

28th Apr 2022 04:50 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை(ஏப்.29) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில், ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களுடைய குறைகளை, கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT