நாமக்கல்

ஊரக வளா்ச்சித் துறையினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

28th Apr 2022 04:51 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் மூன்றாம் கட்டமாக மாவட்ட அளவிலான ஆா்ப்பாட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இரா.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஊராட்சியில் பணியாற்றிவரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு ரூ. 850 என்ற குறைவான ஊதிய அறிவிப்பை ரத்து செய்து திருத்தப்பட்ட புதிய ஊதியத்தை அறிவிக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி முடித்த ஊராட்சி செயலா்களுக்கு வட்டாரத்திற்குள் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 3,600 ஊதியம் என்பதை ரூ. 10 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் பதவி உயா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாநில, மாவட்ட அளவிலான நிா்வாகிகள், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT