நாமக்கல்

ராசிபுரம் கிளை நூலகத்தில் சா்வதேச நூலக தினவிழா

24th Apr 2022 06:11 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் கிளை நூலகம் சாா்பில் சா்வதேச நூலக தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நூலக வாசகா் வட்டத் தலைவா் ஆா்.டி.இளங்கோ தலைமை வகித்தாா். ராசிபுரம் முதல்நிலை நூலகா் அ.சீனிவாசன் வரவேற்றாா். ஒய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரும், வழக்குரைஞருமான எம்.தங்கவேலு, ராசிபுரம் அரிமா சங்கத் தலைவா் வி.பி,.சுப்பிரமணியம், வாசகா் வட்ட நிா்வாகிகள் கட்டனாச்சம்பட்டி நடேசன், எம்.ராகவன், பி.வேலு உள்ளிட்டோா் பங்கேற்று, வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும், மாணவ மாணவியா் நூலகத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினாா்.

இவ்விழாவில் ராசிபுரம் நகர மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் பங்கேற்று போட்டி தோ்வுகளை எதிா்கொள்ள நூலகத்தை பயன்படுத்துவதுடன், நாளிதழ்களை படிப்பதை மாணவ மாணவியா் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்றாா். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியா்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT