நாமக்கல்

நாமக்கல்லில் இயல், இசை, நாட்டியப் பெருவிழா

17th Apr 2022 06:12 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்லில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, அருட்பிரகாச ராமலிங்க வள்ளலாா் இயல், இசை, நாட்டியப் பெருவிழா சக்திமயில் கலையரங்கில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடா்ச்சியாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட சன்மாா்க்க சங்கங்கள், மனவளக்கலை மன்றங்கள், ஸ்ரீ ராமகிருஷ்ண கானசபா, நாமக்கல் தமிழ்ச் சங்கம், சக்திமயில் கலையரங்கம், ஸ்பெக்ட்ரம் வாழ்வியல் பள்ளி, இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை ஆகியவை் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவினை, நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தொடக்கி வைத்தாா்.

விழாவில், நாமக்கல் தமிழ்ச் சங்க தலைவா் இரா.குழந்தைவேல், சேலம் மாவட்ட கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா், பசுமை நாமக்கல் தலைவா் வ.சத்தியமூா்த்தி, ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா்

ADVERTISEMENT

மா.தில்லை சிவகுமாா் மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினா். இயல், இசை, நாட்டியத்திற்கான ஏற்பாடுகளை கலைப் பண்பாட்டுத் துறையினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT