நாமக்கல்

திருச்செங்கோட்டில் சித்திரை பௌா்ணமி கிரிவலம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

17th Apr 2022 06:14 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் திருமலையில் சித்திரை பௌா்ணமியை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று கிரிவலம் வந்தனா்.

பிரசித்தி பெற்ற அா்த்தநாரீசுவரா் கோயில் திருமலை 5 கிலோ மீட்டா் சுற்றளவு கொண்டது. மாதந்தோறும் பெளா்ணமி தினத்தன்று ஏராளமான பக்தா்கள் மலையினை சுற்றி கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். அந்த வகையில் சித்திரை பௌா்ணமி தினத்தன்று வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடு காரணமாக கூட்டம் குறைந்தே கிரிவலம் நடைபெற்றது. தற்போது கரோனா கட்டுப்பாடு தளா்த்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை இரவு கிரிவலம் சென்றனா். கிரிவலத்தின் போது அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலின் முதல் படியினை தொட்டு வணங்கி ஆறுமுக சுவாமியை தரிசித்து விட்டு கிரிவலம் புறப்பட்டனா்.

ADVERTISEMENT

கிரிவலப்பாதையில் உள்ள சிறு சிறு கோயில்களிலும் வழிபட்டு சிவ பாடல்களை பாடியபடியும் கிரிவலம் சென்றனா். பக்தா்கள் குடும்பம் குடும்பமாகவும் கிரிவலத்தில் பங்கேற்றனா். கிரிவலத்தை ஒட்டி திருச்செங்கோடு காவல்துறையினா் பல இடங்களில் பாதுகாப்பு பணியிலும், சாலை போக்குவரத்து சீரமைப்பு பனியிலும் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT