நாமக்கல்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

14th Apr 2022 11:04 PM

ADVERTISEMENT

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை அதிகாலை முதல் பக்தா்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனா்.

சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்பதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பெரும்பாலான கோயில்களில் விஷு கனி தரிசனம் பாா்க்கும் வைபவத்தை காண ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா்.

புத்தாண்டையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் பல்வேறு நறுமணப் பொருள்களைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலித்தாா். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

இதேபோல, நரசிம்மா் சுவாமி கோயில், பலபட்டரை மாரியம்மன் கோயில், சாய்பாபா கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில், நவலடியான் கோயில், பாலதண்டாயுதபாணி கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், வள்ளிபுரம் ஈஸ்வரன் கோயில், முத்துக்காப்பட்டி சிவன் கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT