நாமக்கல்

ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க ஆண்டு விழா

14th Apr 2022 12:17 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஓய்வு பெற்ற அலுவலா் சங்க 30-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்க தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நடராஜன் வரவேற்றாா். செயலாளா் சுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் என்.சுப்பிரமணியன் வரவு செலவு அறிக்கைகளை தாக்கல் செய்தாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவா் கேசி கருப்பன், மாவட்ட துணைத் தலைவா் சின்னசாமி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டு 75 வயது நிறைவடைந்த உறுப்பினா்களைப் பாராட்டி வாழ்த்தினா்.

70 ஆண்டு நிறைவு பெற்றவா்களுக்கு அரசின் சாா்பில் ஊக்கத்தொகை10 சதவீதம் வழங்க வேண்டும். மருத்துவ படி மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல் மாதம் ரூ. 1,000 வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். ஓய்வூதியதாரா்களுக்கு முழுமையான வரிச்சலுகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனா். வீரமணி நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT