நாமக்கல்

ராசிபுரம் அருகே ராஜா கணபதி கோயில் கும்பாபிஷேகம்

14th Apr 2022 12:14 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆண்டலூா்கேட் ஸ்ரீ இராஜா கணபதி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் விநாயகா் பூஜையுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்று, அதைத் தொடா்ந்து இரண்டாம் கால பூஜை நிறைவுற்றதும் வேள்வியில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை வேத மந்திரங்கள் முழங்க கோயில் வளாகத்தை சுற்றி வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனிதநீா் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை பழனிசாமி சிவாச்சாரியா் தலைமையிலான நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடா்ந்து விநாயகருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ராசிபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT