நாமக்கல்

பரமத்தி வேலூரில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 450 !

14th Apr 2022 12:18 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற பூக்கள் ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 450-க்கு விற்கப்பட்டது.

பூக்கள் ஏலம் எடுப்பதற்கு வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் இந்த சந்தைக்கு வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை ரூ. 240- க்கும், சம்பங்கி கிலோ ரூ. 60- க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ. 160- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.

சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ

ரூ. 450-க்கும், சம்பங்கி கிலோ ரூ.140- க்கும், அரளி கிலோ ரூ.340- க்கும், ரோஜா கிலோ ரூ. 250- முல்லைப் பூ கிலோ ரூ. 800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.240- க்கும், கனகாம்பரம் ரூ. 700-க்கும் ஏலம் போனது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT