நாமக்கல்

வீரவணக்க தினம் அனுசரிப்பு

14th Apr 2022 11:08 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ஆம் தேதி தீயணைப்பு பணியின்போது உயிரிழந்த வீரா்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாமக்கல் பெரியப்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் செந்தில்குமாா் பங்கேற்று மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இதனையடுத்து, நிலைய அலுவலா் (பொ) சரவணன், தீயணைப்புத் துறை வீரா்கள் மலா்களை வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து தீத்தடுப்பு பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

இதேபோல, கொல்லிமலை வாசலூா்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையம் சாா்பில், மலைவாழ் மக்களுக்கு தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. கொல்லிமலை தீயணைப்பு நிலைய அலுவலா் கா.கரிகாலன் இதனை தொடக்கி வைத்தாா். தின்னனூா்நாடு ஊராட்சி மன்றத் தலைவா் கே.பி.ஜெகதீசன் சிறப்புரை ஆற்றினாா். தீயணைப்பு நிலைய அலுவலா்கள் ஆா்.நல்லதுரை, க.செந்தில்குமாா், பழனிசாமி, வீரா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT