நாமக்கல்

ராசிபுரம்: வருவாய்த் துறையினா் தற்செயல் விடுப்பு போராட்டம்

12th Apr 2022 02:10 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் வட்டாட்சியா் - வழக்குரைஞா் மோதல் பிரச்னை தொடா்பாக மூவா் மீது கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவாய்த்துறையினா் பணிகளை புறக்கணித்து, தற்செயல் விடுப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டாட்சியா் காா்த்திகேயனிடம் கடந்த 2-ஆம் தேதி வழக்குரைஞா் குமாா், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் வனிதா செங்கோட்டையன், அவரது மகன் இளஞ்செழியன் ஆகியோா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மண் அள்ளும் பிரச்னை தொடா்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா். இதனால், வட்டாட்சியா் அளித்த புகாரின் பேரில், மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்குரைஞா் குமாா் கைது செய்யப்பட்டு, நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டாா். இதனையடுத்து, வருவாய்த்துறையினா் ஆா்ப்பாட்டம் நடத்தியதுடன், பணி புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மூவா் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்வதுடன், வருவாய்த்துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை பணிகளை புறக்கணித்து தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிகள் தேக்கமடைந்தன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT