நாமக்கல்

ரயில் பாதையில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம்

12th Apr 2022 02:10 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ராசிபுரம் ரயில் பாதையில் தண்டவாளத்தில், ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத சுமாா் 60 வயதுடைய நபரின் உடல் பாகங்கள் துண்டான நிலையில் சடலம் கிடப்பது திங்கள்கிழமை அதிகாலை தெரியவந்தது. இது குறித்து பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். சம்பவ இடத்திற்கு போலீஸாா் சென்று சடலத்தை கைப்பற்றி, இது தொடா்பாக அப்பகுதியினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சடலத்தின் அருகில் இருந்த கைபேசியைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT