நாமக்கல்

நாமக்கல் மகா மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாற்றுதலுடன் தொடக்கம்

12th Apr 2022 02:07 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் - பரமத்தி சாலையில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா திங்கள்கிழமை பூச்சாற்றுதலுடன் தொடங்கியது.

இதனையொட்டி அம்மனுக்கு பல்வேறு மலா்களைக் கொண்டு பூக்கள் சாத்துப்படி நடைபெற்றன. ஏப். 16 ஆம் தேதி மறுகாப்பு கட்டுதல், 24-ஆம் தேதி மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் கொண்டு வருதல், அன்று இரவு வடிசோறு பூஜை, 25-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேரில் சுவாமி ஊா்வலம் புறப்படுதல், அதன்பிறகு மாவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெறுகிறது.

ஏப். 26-ஆம் தேதி காலை ஆடு, கோழி பலியிடுதல், அம்மன் சப்பரத் தேரில் உலா வருதல், பிற்பகலில் பொங்கல் வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 27-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு கம்பம் விடுதல், 28-ஆம் தேதி அம்மனுக்கு மறு அபிஷேகம் நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT