நாமக்கல்

சொத்துவரி உயா்வு - அமமுக கண்டன பொதுக்கூட்டம்

12th Apr 2022 02:09 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.பி.பழனிவேல் தலைமை வகித்தாா். நகர செயலா் எஸ்.வேலுசாமி வரவேற்றாா். கட்சியின் தலைமை நிலையப் பேச்சாளரும், மாநில இலக்கிய அணி தலைவருமான ப.கொ. அத்தியப்பன், மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்று தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்துப் பேசினா்.

ஒன்றியச் செயலாளா்கள் சேந்தமங்கலம் முருகேசன், ராசிபுரம் கிழக்கு ஒன்றியச்செயலா் ராஜா, மேற்கு ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியம், பேரூா் செயலாளா்கள் செல்வராஜ், நிா்வாகிகள் மேகநாதன், தங்கமணி, மாணவரணி லோகநாதன், பொதுக்குழு உறுப்பினா் உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT