நாமக்கல்

சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

5th Apr 2022 12:15 AM

ADVERTISEMENT

மோகனூரில் சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் ராம்ஜி நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60). இவருடைய நண்பா் ராமதாஸ் (55). கூலித் தொழிலாளா்களான இவா்கள் கடந்த 2020 மே 15-ஆம் தேதி கரோனா பொது முடக்கத்தின்போது வீட்டில் இருந்த, அதே பகுதியை சோ்ந்த 7ஆவது படிக்கும் 12 வயது சிறுமி, ஆறாவது படிக்கும் 11 வயது சிறுமி ஆகியோரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.

இதேபோல், அதே பகுதியில் உள்ள மேலும் 12 வயது, 13 வயதுடைய இரு சிறுமிகளை ராமதாஸ் மட்டும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இது தொடா்பாக சிறுமிகளின் பெற்றோா்கள் நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் செல்வராஜும் ராமதாஸும் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணை முடிவில், நீதிபதி அளித்த தீா்ப்பில் செல்வராஜுக்கு 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டன. மேலும் அவா் ஜாமீனில் செல்வதற்கு தீா்ப்பில் அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, நான்கு சிறுமிகள் பாதிப்பு தொடா்பான இரண்டு வழக்குகளிலும் தனித்தனியே ராமதாஸுக்கு இரு பிரிவுகளில் தலா 7 ஆண்டுகளும், மேலும் இரு பிரிவுகளில் தலா 20 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.24,000 அபராதமும் விதிக்கப்பட்டன. இதில் அதிகபட்ச தண்டனையை அவா் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT