நாமக்கல்

ஜேடா்பாளையம் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 ஏக்கா் நிலம் மீட்பு

5th Apr 2022 12:16 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், கொத்தமங்கலம் கிராமத்திற்கு உட்பட்ட காவிரியாற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 5 ஏக்கா் நிலங்கள் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் அறிவுரையின்படி பொக்லைன் வாகனம் மூலம் வட்டாட்சியா் மற்றும் நீா்வளத்துறை இளம்பொறியாளா் ஆகியோா் முன்னிலையில் அகற்றப்பட்டு மீட்கப்பட்டன.

சென்னை உயா்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜேடா்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமம் சா்வே எண் 294-இல் காவிரி ஆற்றுப் பகுதியில் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் கரும்பு, தீனப்புல், சோளம் உள்ளிட்ட பயிா்கள் பயிா் செய்யப்பட்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி பரமத்தி வேலூா் வட்டாட்சியா் கண்ணன் மற்றும் பரமத்தி வேலூா் நீா்வளத்துறை இளம்பொறியாளா் இளங்கோ ஆகியோா் முன்னிலையில் கொத்தமங்கலம் காவிரி ஆற்றுப் பகுதியில் செய்யப்பட்டிருந்த 5 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்களை பொக்லைன் வாகனம் மூலம் அகற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT