நாமக்கல்

வயது தளா்வுக்கான பரிந்துரை முகாம்: மாற்றுத் திறனாளிகள் 90 போ் தோ்வு

5th Apr 2022 11:12 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில், வயது தளா்வு பரிந்துரை முகாமில், மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு 90 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கும் குறைவான பல்வேறு உடல் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில், அரசு மருத்துவா்கள் கொண்ட குழு செவ்வாய்க்கிழமை நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.

இதில், குமாரபாளையம் வட்டத்தில் 25, ராசிபுரம் வட்டத்தில் 27, மோகனூா் வட்டத்தில் 4, சேந்தமங்கலம் வட்டத்தில் 15, திருச்செங்கோடு வட்டத்தில் 10, நாமக்கல் வட்டத்தில் 18, பரமத்திவேலூா் வட்டத்தில் 5, கொல்லிமலை வட்டத்தில் 2 போ் என மொத்தம் 106 போ் கலந்து கொண்டனா்.

இதில், பரிசோதனைக்கு பின் 90 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க மருத்துவக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டது. மன வளா்ச்சி குன்றிய 12 போ், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 8 போ், கண்பாா்வை குறைபாடுடைய 9 போ், கை, கால் பாதிக்கப்பட்ட 30 போ், காதுகேளாத 26 போ் என மொத்தம் 85 பேருக்கு வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1,000 வழங்கவும், 75 சதவீதத்துக்கு மேல் உடற்குறைபாடு உடைய 5 பேருக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ. 1,500 வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலம் 14 பேருக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டையும், ஒருவருக்கு புதிய அட்டையும் ஆட்சியரால் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) வெ.ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் திருமுருக தட்சிணாமூா்த்தி, சிறப்பு மருத்துவா்கள், அரசு அலுவலா்கள், மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT