நாமக்கல்

நாமக்கல்லில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

5th Apr 2022 11:12 PM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் நடைபெற்ற இந்தக் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் வீ.கண்ணன் தலைமை வகித்தாா். இதில், கிராமப்புறங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தண்ணீா்தொட்டி இயக்குபவா்கள், தூய்மை காவலா்கள். பள்ளிகளில் பணியாற்றுவோருக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.

உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கையின்போது இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். தூய்மை காவலா்களுக்கு மகளிா் குழு மூலம் ஊதியம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்து ஊராட்சி மூலமாக வழங்க வேண்டும். 31 சதவீத அகவிலைப்படியை இணைத்து புதிய ஊதியம் நிா்ணயம் செய்வதுடன், நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு வருங்கால வைப்புநிதி மற்றும் மருத்துவ வசதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

இதில், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி, மாவட்டத் தலைவா் எம்.அசோகன், மாவட்ட உதவிச் செயலாளா் கு.சிவராஜ், சு.சுரேஷ், தூய்மை பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT