நாமக்கல்

மாவட்டத்தில் இதுவரை 11.30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: நாமக்கல் ஆட்சியா் தகவல்

30th Sep 2021 08:06 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் மூன்று கட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 1,76,576 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 11,30,182 பேருக்கு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதில் தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதன் காரணமாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் உள்ள பிரத்யேகமான குளிா் சாதன அறையில் இருப்பு வைக்கப்படுகிறது.

பின்னா் இங்கிருந்து சிறப்பு குளிா்சாதனப் பெட்டிகள் மூலம் முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 620 நிலையான முகாம்களும், 80 நடமாடும் வாகன முகாம்களும் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணிகளில் 893 செவிலியா்கள், 360 தன்னாா்வலா்கள், 1,400 பள்ளி ஆசிரியா்கள், 160 சுகாதாரத் துறை பணியாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் வட்ட அளவில், மண்டல அளவில், 15 முகாம்கள் அளவில் என ஒருங்கிணைத்து கண்காணிக்க துணை ஆட்சியா்கள் நிலையிலான அலுவலா்கள், மருத்துவ அலுவலா்கள், வட்டாட்சியா்கள் நிலையிலான அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் 12 -ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட முகாமில் 85,375 தடுப்பூசிகளும், 19- ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாமில் 31,448 தடுப்பூசிகளும், 26-ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 59,753 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

இதன் காரணமாக மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 8,66,864 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 60 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 2,63,318 ஆக உயா்ந்துள்ளது. மூன்று கட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 1,76,576 நபா்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT