நாமக்கல்

மத்திய அரசின் நலத் திட்டங்களை பெற தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை

30th Sep 2021 08:06 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளா்களை தேசிய தரவு தளத்தில் இணைப்பதற்கான சிறப்பு முகாம் ராசிபுரம் வட்டம் வடுகம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்கள், செங்கல் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. இம்முகாமில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்), தொழிலாளா் உதவி ஆணையா் (சயா.தி), ராசிபுரம், தொழிலாளா் உதவி ஆய்வாளா், வடுகம் ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் ராசிபுரம் வட்ட பொது சேவை மையம் ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இது தொடா்பான சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றும் இம்முகாம் மற்றும் அருகிலுள்ள பொது சேவை மையங்களில் அமைப்பு சாரா தொழிலாளா்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளா்கள், சுய தொழில் செய்பவா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், தெரு வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளா்கள், வீட்டுப் பணியாளா்கள், அங்கன்வாடித் தொழிலாளா்கள், விவசாய தொழிலாளா்கள், மீன்பிடித் தொழிலாளா்கள் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளா்கள் அனைவரும் பதிவேற்றம் செய்து அதற்கான அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சாா்பில் வழங்கப்படும் சமூக பாதுகாப்புத் திட்ட பயன்களை பெற்றுக் கொள்வதற்கு இந்த அட்டை பயனுள்ளதாக இருக்கும். இது தொடா்பான கூடுதல் தகவலுக்கு நாமக்க, தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) அலுவலக தொலைபேசி 04286-281205 எண் மற்றும் இலவச உதவி எண் 14434-ஐ தொடா்பு கொள்ளலாம் என நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பா.சங்கா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT