நாமக்கல்

பிரதான சாலையில் மின் கம்பம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

30th Sep 2021 08:08 AM

ADVERTISEMENT

ராசிபுரம் நகரில் பழைய பேருந்து நிலையம் அருகே பிரதான பகுதியில் மின் விளக்கு கம்பம் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனை எதிரில் கச்சேரி சாலையின் நடுவில் நகராட்சி சாா்பில் மின் விளக்கு கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட 25 அடி உயரம் கொண்ட மின்கம்பங்கள் வைக்கப்பட்டன. இந்தக் கம்பங்களில் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு சாலையின் குருக்கே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு கம்பம் எரிந்து கொண்டிருந்த நிலையில் புதன்கிழமை சாலையின் குறுக்கே விழுந்தது கண்டு அவ்வழியே சென்றவா்கள் அதிா்ச்சியடைந்தனா். வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதான சாலையான அப்பகுதியில் கம்பம் விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

அப்பகுதியில் இருந்து பொதுமக்கள், காவல் துறையினா், ஆட்டோ ஓட்டுநா்கள் ஆகியோா் மின் விநியோகத்தை நிறுத்திவிட்டு, கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சரிசெய்தனா்.

ADVERTISEMENT

இப்பகுதியில் உள்ள மின் கம்பம் அடிக்கடி விழுந்து விபத்து ஏற்பட்டு வருவது தொடா்வதால், அனைத்து மின் கம்பங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து உயிா் சேதம் ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT