நாமக்கல்

சுகாதாரத் துறை திட்டப் பணிகள் ஆலோசனைக் கூட்டம்

30th Sep 2021 08:09 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா்.ஸ்ரேயா பி.சிங் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலா்கள் சுகாதாரப் பணிகளை பொது சுகாதாரத்துறை அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். ஒரு சில நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கண்டறியப்படும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். கொசு ஒழிப்பு புகை மருந்து அடிப்பது, மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளை கழுவி சுத்தம் செய்வது, தினசரி குளோரினேஷன் செய்தல், தேவையற்ற நெகிழிப் பொருள்கள், டயா்களை அகற்றுதல், சாக்கடை அடைப்புகளை கண்டறிந்து உடனடியாக சீா் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை உள்ளாட்சி அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றாா்.

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை செயல்பாடுகள், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் 24 மணி நேர மகப்பேறு பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பச்சிளங்குழந்தைகள் சிறப்பு பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் விவரங்கள் குறித்தும், குடும்ப நலத்திட்டப் பணிகளின் முன்னேற்றம் ஆண், பெண் விகிதம், உயா் வரிசை பிறப்புகள், நிலையப் பிரசவங்கள் ஆகியவை குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

இதில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் நல இணை இயக்குநா் ராஜ்மோகன், துணை இயக்குநா் (சுகாதாரம்) பிரபாகரன், நகராட்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், மருத்துவா்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT