நாமக்கல்

காந்தி ஜயந்தி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

30th Sep 2021 08:06 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு அக்.2-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில், காந்தி ஜயந்தியை (அக்.2) முன்னிட்டு இந்திய தயாரிப்பு, அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நாளில் மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT