நாமக்கல்

ஊட்டச்சத்து விழிப்புணா்வு கருத்தரங்கு

30th Sep 2021 08:07 AM

ADVERTISEMENT

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் உணவும், ஊட்டச்சத்தும் என்ற தலைப்பில் புதன்கிழமை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லுாரி முதல்வா் பெ.முருகன் தலைமை வகித்தாா். மருத்துவா் நடராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, உணவில் சோ்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள், பழங்களின் முக்கியத்துவம் குறித்தும், அதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் ரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினாா். இந்த நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணிகள் திட்ட அலுவலா்கள் நாகராஜன், இன்னமுது உள்பட பல்வேறு துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT