நாமக்கல்

இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது சரக்கு ஆட்டோ மோதி பெண் பலி

30th Sep 2021 08:06 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் தந்தை கண்முன்னே மகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம் பட்டி அருகே உள்ள சுங்ககாரம்பட்டி வெங்கமேடு பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (65). விவசாயி. இவா் தனது மகள் தங்கம்மாளை (45) இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வேலகவுண்டம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தாா். அணியாா் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து சென்ற தங்கம்மாள் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பலியானாா்.

படுகாயமடைந்த துரைசாமியை அங்கிருந்தவா்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா், தங்கம்மாளின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தை ஏற்படுத்தியதாக வேலகவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகனான சரக்கு ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டனை (19) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT