நாமக்கல்

ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை; ரூ. 32,000 ரொக்கம் பறிமுதல்

30th Oct 2021 12:07 AM

ADVERTISEMENT

ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்தில் பட்டாசுக் கடை அனுமதிக்கு லஞ்சம் பெற்ாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில் கணக்கில் வராத ரூ. 32 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். மேலும் ரூ. 2.50 லட்சம் வசூல் செய்ததற்கான குறிப்புகளையும் கைப்பற்றினா்.

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க அரசு விதிமுறைகளுடன் மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. பட்டாசுக் கடைகள் அமைக்க தீயணைப்புத் துறையினரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். தடையில்லாச் சான்றிதழ் வழங்க ராசிபுரம் தீயணைப்புத் துறையினா் லஞ்சம் கேட்பதாக புகாா் கூறப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராமசந்திரன், ஆய்வாளா் நல்லம்மாள் தலைமையில் ஐந்து போ் கொண்ட தனிப் படையினா் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது நிலைய அலுவலா் கரிகாலன், உதவி அலுவலா் உள்ளிட்டவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தீயணைப்பு வாகனம், இருசக்கர வாகனம், அலுவலக மேஜை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரொக்கம் ரூ. 32 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் ரூ. 2.50 லட்சம் லஞ்சம் பெற்ாகக் எழுதப்பட்டிருந்த குறிப்பு நோட்டும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT