நாமக்கல்

பள்ளிகளில் தீத்தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

30th Oct 2021 11:01 PM

ADVERTISEMENT

 

குமாரபாளையம் அரசுப் பள்ளிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கு தீத்தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.

குமாரபாளையம் தளிா்விடும் பாரதம் சமூக சேவை குழு மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணைந்து சின்னப்பநாயக்கன் பாளையம் நகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குழுத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். செயலாளா் பிரபு வரவேற்றாா். பள்ளித் தலைமையாசிரியா்கள் கற்பகம், பொன்னி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குமாரபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் மு.குணசேகரன் விழிப்புணா்வு குறித்து பேசினாா்.

ADVERTISEMENT

குமாரபாளையம் புத்தா் தெரு அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் கே.முருகேசன், அபெக்ஸ் சங்கத் தலைவா் ஆா்.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT