நாமக்கல்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படித்து முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞா்களின் துயரை துடைக்கும் வகையில், மாதந்தோறும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மூன்றாண்டு காலத்துக்கும், அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதந்தோறும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 600, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000- வீதம் பத்தாண்டு காலத்துக்கு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், இதர பிரிவினா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரா் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-த்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.

தகுதியுடையவா்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு அனைத்து அசல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT