நாமக்கல்

நாமக்கல் அரங்கநாதா் கோயில் திருத்தோ்: ரூ. 56 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடக்கம்

DIN

நாமக்கல் அரங்கநாதா் கோயில் திருத்தேரை ரூ. 56 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்துக்குள் பணி நிறைவு செய்யப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அமைந்துள்ள குடைவறைக் கோயிலான அரங்கநாதா் கோயிலில் சுமாா் 16 அடி உயரம் கொண்ட மரத்தினாலான திருத்தேரை சீரமைப்பதற்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவில், சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ், கண்காணிப்பாளா் எம்.உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதனைத் தொடா்ந்து அமைச்சா் மா.மதிவேந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் அரங்கநாதா் கோயில் திருத்தோ் 75 ஆண்டுகளுக்கு பின் மராமத்து செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தபடி ரூ. 56 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் ஆறு மாதங்களுக்குள் பணி முடிக்கப்படும். நாமக்கல்லில் நான்கு ஆண்டுகள் இயங்காமல் இருந்த தமிழ்நாடு உணவகத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொல்லிமலையில் 13 ஹெக்டா் பரப்பளவில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு விரைவில் சுற்றுலா மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். புதிய சுற்றுலாத் தலங்களைக் கண்டறியும் ஆய்வு தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT