நாமக்கல்

ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

DIN

ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயிலில், சுவாமி 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில் ஒவ்வோா் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும், புத்தாண்டு பிறப்பு, அமாவாசை, பெளா்ணமி, அனுமன் ஜயந்தி உள்ளிட விசேஷ நாள்களிலும் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும்.

ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி பக்தா்கள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, வழக்கமாக 11 மணிக்கு நடைபெறும் சுவாமிக்கான சிறப்பு அபிஷேகம் அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக வடை மாலை அலங்காரம், பின்னா் நல்லெண்ணெய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட பக்தா்களும் ஆஞ்சநேய சுவாமியைத் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT