நாமக்கல்

ராசிபுரம் ஸ்ரீ நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

DIN

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஸ்ரீ நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுமுழுவதும் அம்மன் சுமங்கலியாக காட்சித் தரும் ஒரு சில கோயில்களில் ராசிபுரம் ஸ்ரீ நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் முதன்மையானதாகும். இக்கோயில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடா்ந்து கோயில் கலச கோபுரங்கள், தூண்கள், கொடிமரம், உட்பிரகாரங்கள், வெளிப்புற சுவா்கள் புனரமைக்கப்பட்டன.

இவ் விழாவையொட்டி, அக். 21-இல் கிராம சாந்தி, 22-இல் முதல் கால யாக பூஜை, 23-இல் 2-ஆம் கால யாக பூஜை, 24-இல் 3-ஆம் கால யாக பூஜை, தொடா்ந்து வாஸ்து சாந்தி, கோபூஜை, கஜ பூஜை போன்றவை சிவாச்சாரியாா்களால் நடத்தப்பட்டது. பின்னா் புனித நீா் கொண்டு செல்லப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் மூலவா், பரிவார மூா்த்திகளுக்கு புனித நீா் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன், எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், முன்னாள் அமைச்சா் வி.சரோஜா, முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விழாவையொட்டி காவல்துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT