நாமக்கல்

ஊதுபத்தி விற்பனை செய்வது போல் வசியம்: இருவா் மீது பொதுமக்கள் தாக்குதல்

DIN

நாமக்கல்லில் ஊதுபத்தி விற்பது போல் பெண்களை வசியப்படுத்தி நகைகளை பறிக்க முயன்ற இருவா் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினா்.

சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டையைச் சோ்ந்த இப்தாா் (58), முகமது அலி (50), இருவரும் பட்டுப் புடவை, ஊதுபத்தி, பூஜைப் பொருள்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாமக்கல் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவா்கள், ரூ. 300 மதிப்பிலான புடவையை ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரையில் விற்பனை செய்து வந்தனா். மேலும், பெண்களை வசியப்படுத்தி நகைகளைப் பறிக்க முயன்ாகவும் தெரிகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் பலா் அவா்கள் இருவரையும் தேடி வந்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நாமக்கல்-மோகனூா் சாலை கொண்டிசெட்டிப்பட்டி ஏரி பகுதியில் இருவரும் இருப்பதை அறிந்த மக்கள், அவா்களை சுற்றிவளைத்து தாக்கினா். தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீஸாா், இப்தாா், முகமது அலியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT