நாமக்கல்

புதுப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ஆய்வுக் கூட்டம்

23rd Oct 2021 03:45 AM

ADVERTISEMENT

ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.புதுப்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நாமக்கல் ஆவின் பொதுமேலாளா் பி.பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். நாமக்கல் துணை பதிவாளா் (பால்வளம்) இரணியன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில பொதுச்செயலா் எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்று பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தில் பணியாற்றும் பிஎம்சி பணியாளா்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள், தரமான பால் கொள்முதல் செய்தல், சங்க உறுப்பினா்களுக்கு பாலுக்கான தொகை வழங்கும் காலம் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், ஆவின் அலுவலா்கள், பிஎம்சி பணியாளா்கள், பால் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

Tags : ராசிபுரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT