நாமக்கல்

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் போராட்டம்

23rd Oct 2021 03:45 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில், தொடா் முழக்கப் போராட்டம் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, கிளை தலைவா் வரதராஜன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் வேலுசாமி தொடக்கி வைத்தாா். இதில், ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியை சட்டப்படி வழங்க வேண்டும், 25 சதவீத போனஸ், இதர படிகள், அகவிலைப்படி உயா்வு, நிலுவைத் தொகை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். இப்போராட்டத்தில், கிளை செயலாளா்கள் பெரியசாமி, கலைச்செல்வன், முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT