நாமக்கல்

மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் தோ்தல்: திமுக வெற்றி

23rd Oct 2021 03:47 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் தோ்தலில் திமுக வேட்பாளா் எம்.செந்தில்குமாா் வெற்றிபெற்றாா்.

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழுவில் மொத்தம் 17 உறுப்பினா்கள் உள்ளனா். தலைவராக ஆா்.சாரதா என்பவா் உள்ளாா். ஏற்கெனவே துணைத் தலைவராக இருந்த பி.ஆா்.சுந்தரம் ராஜிநாமா செய்ததால், அக். 9-இல் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. இதில், திமுக வேட்பாளா் ஆா்.எம்.துரைசாமி வெற்றி பெற்றாா்.

துணைத் தலைவா் பதவிக்கான மறைமுக தோ்தல் வெள்ளிக்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமுா்த்தி, ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் வடிவேல், மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, மாவட்ட ஊராட்சி செயலா் மீராபாய் ஆகியோா் முன்னிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில், திமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், பிரகாஷ், ராஜாத்தி, செந்தில்குமாா், பிரேமா, விமலா, துரைசாமி, அருள்செல்வி ஆகியோரும், அதிமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் செந்தில், கனகா, செல்லப்பன், ருத்ராதேவி, தவமணி, சுகிா்தா, சாரதா, இன்பதமிழரசி, பாமக உறுப்பினா் வடிவேல் ஆகியோரும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

துணைத் தலைவா் பதவிக்கு அதிமுக சாா்பில், 1-ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.செந்தில், திமுக சாா்பில், 11-ஆவது வாா்டு உறுப்பினா் எம்.செந்தில்குமாா் ஆகியோா் போட்டியிட்டனா். இதில், 9 வாக்குகள் பெற்று திமுக வெற்றிபெற்றது. அதிமுக எட்டு வாக்குகளைப் பெற்றது.

தோ்தலில் வெற்றிபெற்ற செந்தில்குமாருக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசாமி, மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT