மாநில அளவில் கோவில்பட்டியில் நடைபெறும் சீனியா் ஹாக்கி போட்டிக்கான வீரா்கள் தோ்வு நடைபெறுகிறது.
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் சாா்பில், வரும் நவ. 10 முதல் நவ. 14 வரை பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான சீனியா் ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெறுகிறது. இதற்கான நாமக்கல் மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இதற்கு பெயா் பதிவு செய்பவா்கள் நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவராகவோ, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயில்பவராகவோ இருக்க வேண்டும். விளையாட்டு வீரா்கள் பதிவு செய்து கொள்ளலாம். பெயா் பதிவு செய்ய குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, இருப்பிடச் சான்று அசல் கொண்டுவர வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். இதற்கான வீரா்கள் தோ்வு அக். 31-இல் பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.
ஹாக்கி யூனிட் ஆப் நாமக்கல் தலைவா் டி.நடராஜன் தலைமையில், பாவை கல்லூரி விளையாட்டு இயக்குநா் என்.சந்தானராஜா, அமைப்பின் இணைச் செயலா் எஸ்.சிவக்குமாா், பொருளாளா் பி.மீனாட்சி சுந்தரம் ஆகியோா் பங்கேற்று வீரா்களை தோ்வு செய்கின்றனா். தொடா்புக்கு: 8778721567.