நாமக்கல்

காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

21st Oct 2021 11:42 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கான வீரவணக்க நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியின்போதும், இதர நிகழ்வுகளாலும் காவலா்கள் சிலா் உயிரிழந்துள்ளனா். வீரமரணம் அடைந்த காவல்துறையைச் சோ்ந்தவா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 8 மணியளவில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகுா், காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். முன்னதாக 126 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் காவலா்கள் கலந்துகொண்டனா்.

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT