நாமக்கல்

கல்குவாரிகள் அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

DIN

கல்குவாரிகள் அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மரப்பாரை கிராமத்தில் தனியாா் நிறுவனத்தினா் கல், கிராவல் குவாரிகள் அமைக்க அனுமதி கேட்டுள்ளனா். அதையொட்டி,, மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்ற பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில், சுரங்கத் துறை ஆய்வாளா்கள், குவாரிகளின் உரிமையாளா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், விவசாயிகள், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டு, தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள், கருத்துகள் முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டது. மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தாக்கம் குறித்த குழுவினருக்கு அந்த விடியோ அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் தே.இளவரசி, மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகுமாா், திருச்செங்கோடு வட்டாட்சியா் எஸ்.கண்ணன் உள்ளிட்ட வருவாய்த் துறை, அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

SCROLL FOR NEXT